Advertisement

மனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்

பொது அக்டோபர் 15,2019 | 19:12 IST

Share

யானை - மனித மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில், ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலியெழுப்பும் கருவியை கரூர், காந்தி கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் அபிநவ் வடிவமைத்துள்ளார். ஆசிரியர் ராஜசேகரன் இதற்கு உதவியுள்ளார். சிறிய ஒலிபெருக்கி, தானியங்கி சென்சார்களுடன் குறைந்த செலவில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக யானைகளுக்கு தேனீக்களின் ரீங்காரம் பிடிக்காது; ரீங்கார ஒலியை 8 மீட்டர் முன்னரே உணரும் யானைகள் உடனே அங்கிருந்து விலகி சென்றுவிடும். வனத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களில் இக்கருவியை பொருத்துவதன் மூலம், யானைகள் நுழைவதை தடுக்க முடியும். யானைகள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைப்பது; தீ மூட்டுவது, பட்டாசு வெடிப்பது போன்றவற்றைவிட தேனீ ரீங்கார ஒலியெழுப்பும் கருவி பாதுகாப்பானது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X