Advertisement

தூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை

பொது அக்டோபர் 16,2019 | 15:47 IST

Share

தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு 'காயகல்ப்' விருது வழங்கப்படுகிறது. 2018-19 ஆண்டிற்கான காயகல்ப் விருதினை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கினார். அதில் முதலிடத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், இரண்டாம் இடத்தைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் பெற்றன. இரண்டாமிடம் பிடித்த ஜிப்மர் மருத்துவமனைக்கு காயகல்ப் விருதுடன், ரூ. 1.5 கோடி பரிசு தொகையை அதன் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பெற்றுக்கொண்டார். ஜிப்மரை பொறுத்தவரையில் தூய்மைக்காக 2017-18 ஆண்டு ரூ. 50 லட்சம் பரிசு பெற்றிருந்தது. அதைவிட இந்த ஓராண்டு நல்ல முன்னேற்றம் அடைந்ததற்காக இந்த விருதினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X