பொது » கல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி அக்டோபர் 16,2019 18:08 IST
ஈரோடு, அந்தியூர் அருகே அந்தோணிபுரத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறைகளுக்கு வெடி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பாறையில் துளையிட்டு வெடிமருந்துகளை நிரப்பிக்கொண்டிருந்தபோது, திடீரென அது வெடித்துள்ளது. இதில், நெரிஞ்சிபேட்டையை சேர்ந்த செந்தில், சேலம்,ஓமலூரை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து