Advertisement

ராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா? ஸ்டாலின் சவால்

அரசியல் அக்டோபர் 18,2019 | 19:20 IST

Share

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் டைரக்டர் வெற்றி மாறனை பாராட்டினார். ''பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம்'' என ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று, 'முரசொலி' அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் ஒடப்படைப்பாரா?'' என கேள்வி எழுப்பியிருந்தார். ராமதாசின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்டாலின் “முரசொலி இடம் பஞ்சமி நிலமல்ல தனியாருக்கு சொந்தமான பட்டாமனை'' என விளக்கமளித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X