Advertisement

வெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்

பொது அக்டோபர் 19,2019 | 15:05 IST

Share

மாமல்லபுரத்தில், சமீபதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர். இருவரின் சந்திப்பை முன்னிட்டு சுற்றலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது தடைநீக்கப்பட்ட நிலையில், அழகுபடுத்தப்பட்ட மாமல்லபுரத்தை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்னோர் வருகின்றனர். இந்நிலையில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றி பார்க்க சனிக்கிழமை முதல் 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்ணை உருண்டை பாறை பகுதியை கூடுதல் கவனத்துடன் பராமரிப்பதற்காகவே கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X