பொது » டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு அக்டோபர் 19,2019 18:28 IST
கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். விழாவில் மாணவர்களிடம் உரையாற்றிய தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இன்றைய இளைய தலைமுறையினர் நினைக்கின்றனர். மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். எனவே, மாணவர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். தடைகளை தாண்டி குறிக்கோளை நோக்கி மாணவர்கள் எப்போதும் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சென்னை, எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில் முதல்வர் பழனிச்சாமி ஞாயிறன்று டாக்டர் பட்டம் பெற உள்ள நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து