விளையாட்டு » நீத்தார் நினைவுதின மாரத்தான் அக்டோபர் 20,2019 14:47 IST
தமிழகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த காவலர்களை நினைவுகூரும் விதமாக அக்டோபர் 21ல் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பொள்ளாச்சியில் காவல்துறை சார்பில், உயிர்நீத்த காவலர்களின் நினைவாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. பொள்ளாச்சி டி.எஸ்.பி., சிவக்குமார் போட்டியை துவக்கி வைத்தார் 6 கிலோ மீட்டர் மாரத்தானில் 5 வயது முதல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
வாசகர் கருத்து