Advertisement

கஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி

சினிமா வீடியோ அக்டோபர் 21,2019 | 18:00 IST

Share

தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான பேர் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். நாகை மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டித்தர ரஜினி உறுதியளித்தார். இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளும் இன்று(அக்.,21) உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 10 குடும்பத்தாரையும் ரஜினி, தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து வீட்டிற்கான சாவியை வழங்கியதோடு, ஒரு விளக்கும் வழங்கினார். வீடு பெற்றவர்கள், ரஜினிக்கு நெகழ்ச்சியுடன் நன்றி கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X