பொது » கலப்பட டீத்தூள் பறிமுதல் அக்டோபர் 22,2019 17:46 IST
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும்நிலையில், உடுமலை சாலையில் உள்ள பலகார தயாரிப்பு நிறுவனங்களில் உணவுபாதுகாப்புதுறையினர் கலப்படம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். பலகாரம் தயாரிக்கும் எண்ணெய், புட் கலர், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக, மின் நகர் தொழிற்பேட்டையில் டீத்தூள் தயாரிப்பு நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து