பொது » பணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள் அக்டோபர் 22,2019 18:45 IST
எங்களுக்கும், எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயலுக்கும், நடவடிக்கைக்கும், தொடர்பில்லை என்கிறார் கருணாநிதியின் மகள் செல்வி. 80 லட்சம் ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக சவுகார்பேட்டையை சேர்ந்த தினேஷ் அளித்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதிமணி மீது நீலாங்கரை போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பணத்தை திரும்பிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டதால் அவரை கைது செய்யவில்லை. ஜோதிமணி மீது இந்த ஒரு வழக்கு மட்டும் இல்லை. 2011ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அவர் பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பல போலீஸ் ஸ்டேன்சகளில் வழக்குகள் உள்ளன.
வாசகர் கருத்து