Advertisement

ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்

பொது அக்டோபர் 22,2019 | 19:47 IST

Share

உடுமலை, சங்கிலி வீதியை சேர்ந்த, ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் கருப்புசாமி, அருண்குமார் ஆகியோர் ஆந்திரா மாநிலம் பாடகிரி மலைப்பகுதியிலிருந்து, ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தி வந்து பல்வேறு மாவட்டங்களிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். 18 ம் தேதி கொண்டுவந்த 600 கிலோ கஞ்சாவை சம்பந்தபட்டவர்களுக்கு கொடுக்காமல் பதுக்கியுள்ளனர். தாங்களே விற்பனை செய்ய முடிவு செய்து, அதில் 300 கிலோவை கருப்பசாமி தனது வீட்டில் வைத்துவிட்டு எஞ்சிய 300 கிலோவுடன் உடுமலை- பழநி ரோட்டில் சென்றபோது, போதை தடுப்பு நுண்ணறிவு போலீசாரிடம் சிக்கினார். ஆம்புலன்ஸ் மற்றும் வீட்டில் இருந்த 600 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கடத்தலுக்கு உதவியதாக மற்றொரு டிரைவர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X