Advertisement

பெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்

சம்பவம் அக்டோபர் 23,2019 | 16:30 IST

Share

வேலூர் மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து அரக்கோணம், ஆந்திரா, கவ்ஹாத்தி வழியாக அசோம் மாநிலம் சில்சார் வரை செல்லும் ஆரோனை பயணிகள் விரைவு ரயில் வழக்கம் போல் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. அப்போது பெண் பயணி ஒருவர் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியுள்ளார். அதில் இருந்த சிலர் அப்பெண்ணைத் தரைகுறைவாக பேசி தாக்கி இறக்கி விட்டுள்ளனர். இதனை கண்ட சக பயணிகள் புறப்பட்ட ரயிலை, சங்கிலி பிடித்து இழுத்து நிறுத்தி பெண்ணைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்க வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் ஆரோனை விரைவு ரயில் உட்பட பின்னால் சென்னை நோக்கி சென்ற அனைத்து ரயில்கள அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X