Advertisement

டேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது

பொது அக்டோபர் 23,2019 | 19:26 IST

Share

பொள்ளாச்சி அருகே சின்ன நெகமத்தில், நிறுத்தப்படும் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மாயமானதால், பங்க் உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். டேங்கர் லாரி நிறுத்தும் இடத்தில் ரகசியமாக கண்காணித்தபோது, லாரியின் சீலை உடைத்து நான்கு பேர் கேன்களில் பெட்ரோல் திருடியபோது, அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த கமலேஷ், விக்ரம், தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த பீட்டர் அய்யாசாமி, நாகராஜ் ஆகியோரை கைது செய்து நெகமம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் பல மாதங்களாக இரவு நேரங்களில் ஓட்டுநர்கள் உதவியுடன் பெட்ரோல், டீசலை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X