Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு அக்டோபர் 24,2019 | 17:55 IST

Share

பெடரர் முன்னேற்றம் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் இன்டோர்ஸ்' டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், மால்டோவாவின் ஆல்பட்டை சந்தித்தார். முதல் செட்டை 6-0 என கைப்பற்றிய பெடரர், அடுத்த செட்டையும் 6-3 என தனதாக்கினார். முடிவில், பெடரர் 6-0, 6-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ............ ஆனந்தன் மீண்டும் தங்கம் சீனாவில் உலக ராணுவ போட்டிகள் நடக்கின்றன. இதன் மாற்றுத்திறனாளிகளுக்கான 200 மீ., ஓட்டத்தில், தமிழகத்தின் ஆனந்தன் பங்கேற்றார். இலக்கை 24.31 வினாடியில் கடந்த இவர் தங்கம் வென்றார். ஏற்கனவே, இத்தொடரில் 100 மீ., மற்றும் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றி இருந்தார். ............. வங்கதேச வீரர்கள் 'ஸ்டிரைக்' வாபஸ் வீரர்களுக்காக சம்பளத்தை அதிகரிப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் இந்தியாவுக்கு எதிராக வரும் நவம்பர் 3ல் துவங்கவுள்ள மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே, வீரர்களுக்கும், வங்கதேச போர்டுக்கும் இடையே நடத்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. இந்திய தொடருக்கு தயாராக வங்கதேச வீரர்கள் சம்மதம் தெரிவித்தனர். ................ 'டி 10' லீக் தொடரில் யுவராஜ் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் நவம்பர் 14ல், தலா 10 ஓவர்கள் கொண்ட அபுதாபி 'டி 10' லீக் தொடர் நடக்கவுள்ளது. இதில், மராத்தா அரேபியன்ஸ் அணி சார்பில், இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒப்பந்தம் ஆகி உள்ளார். சமீபத்தில், கனடாவில் நடந்த 'குளோபல் டுவென்டி-20' தொடரிலும் யுவராஜ் விளையாடி இருந்தார். ......................


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X