Advertisement

அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டால் பரபரப்பு

பொது அக்டோபர் 24,2019 | 19:14 IST

Share

சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள மின்சார வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் வியாழனன்று மாலை, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தட்கல் முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்பிற்கு, செயற் சொறியாளர் பிரகாஷ் லஞ்சம் பெறுவதாக, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, புகார்கள் சென்றன. இதையடுத்து, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி கருணாகரன் தலைமையில் போலீசார், சத்தியமங்கலம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் 89,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றதாக செயற் பொறியாளர் பிரகாஷ் மற்றும் முகவர் சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து துறை நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X