Advertisement

மூழ்கிய தரைப்பாலம்: மக்கள் அவதி

பொது அக்டோபர் 30,2019 | 15:02 IST

Share

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலருகே உள்ள பேரூர் பாலம், பேரூரையும், வீரகேரளம் மற்றும் வேடப்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கிறது. போக்குவரத்திற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்த பாலம், நொய்யலாற்றில் ஏற்பட்ட வௌ்ள பெருக்கால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் தரைபாலத்தின் மேல் வெள்ள நீர் செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பாலத்தை கட்டி முடிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X