பொது » வைரலாகி வரும் பாதிப்புக்குள்ளான அரசு பள்ளிக்கட்டிடம் அக்டோபர் 30,2019 16:02 IST
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தே.இடையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து செவ்வாயன்று பள்ளி திறக்கப்பட்டது. அதுமுதல் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கட்டிடத்தில் இருந்து ஆங்காங்கே மழைநீர் ஒழுகும் காட்சி இணையதளத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 5 வருடங்களாக சேதமடைந்துள்ள இந்தப் பள்ளிக் கட்டிடத்தைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை வட்டாரவளர்ச்சி அலுவலரிடமும், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்துள்ளார். ஆனால், இன்றுவரை அந்தப் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை.
வாசகர் கருத்து