Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 30-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு அக்டோபர் 30,2019 | 19:30 IST

Share

இந்திய பெண்கள் சாம்பியன் வளர்ந்து வரும் பெண்கள் அணிகளுக்கான முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்தது. பைனலில் இந்தியா, இலங்கை மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக மாற்றப்பட்ட இலக்கை (35 ஓவரில் 149 ரன்) துரத்திய இலங்கை அணி 34.3 ஓவரில் 135 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. --------------------------- மேரி கோம், சிந்துவுக்கு பாராட்டு இந்தியாவில் முதன் முறையாக பகலிரவு டெஸ்ட் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் மாதம் 22ல் துவங்க உள்ளது. இதில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பாட்மின்டன் வீராங்கனை சிந்து, ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. --------------------------- சாகிப் தடை: ரசிகர்கள் போராட்டம் வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தவர் சாகிப் அல் ஹசன். போட்டிகளில் 'பிக்சிங்' செய்ய புக்கிகள் அணுகிய விஷயத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்காததால் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த வாரம் வீரர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இவரை, திட்டமிட்டு பழி வாங்கி விட்டதாக, ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். ---------------------------- ராம்குமார் ராமநாதன் தோல்வி சீனாவில் ஷென்ஜென் நகரில் சர்வதேச சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன், சீன தைபேவின் உ டங் லின்னிடம் 3-6, 6-7 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். -----------------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X