Advertisement

பூஸ்ட் - தினமலர்' போட்டிக்கு வீரர் தேர்வு

விளையாட்டு அக்டோபர் 31,2019 | 18:46 IST

Share

திருப்பூர் பி.என்., ரோடு, மாருதி கிரிக்கெட் அகாடமியில், 'பூஸ்ட் - தினமலர்' நாளிதழ் இணைந்து, 11 மற்றும் 14 வயது மாணவர்களுக்கு 'பூஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்டர்ஸ்' என்ற தேர்வினை நடத்தியது. இதில் திருப்பூர் எம்.என்., சிக்கண்ணா செட்டியார், தி எர்னெஸ்ட் அகடாமி சி.பி.எஸ்.இ., அவிநாசி டீ பப்ளிக், எஸ்.என்.எஸ்., பள்ளி, பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி மெட்ரிக் பள்ளி, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த, 150 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவரையும் விளையாட வைத்து பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பர் ஆகியார் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர்களாக பிஷப் உபகாரசாமி பள்ளி மாணவர் சுனில்கண்ணன், தி எர்னெஸ்ட் அகாடமி சி.பி.எஸ்.இ., முகமதுசமீர், திருப்பூர் எம்.என்., சிக்கண்ணா செட்டியார் பள்ளி நிதீன்தாஸ், பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பவீஸ் ஆகிய நால்வர் தேர்வாகினர். இவர்களுக்கு பூஸ்ட் வழங்கும் 'ஸ்காலர்ஷிப்' மூலம், ஆறு மாத இலவச கிரிக்கெட் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்வு முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ், பூஸ்ட் லோகோவுடனான பனியன், கிரிக்கெட் பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X