Advertisement

போலி ஆவணம் மூலம் ரூ.450 கோடிக்கு ஜி.எஸ்.டி., மோசடி

பொது நவம்பர் 02,2019 | 18:35 IST

Share

ஈரோட்டில் செயல்பட்டு வரும் அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் அசோக்குமார் கோடிக்கணக்கான மதிப்பில் போலியான ஆவணங்களை தயார் செய்து கணக்கு காட்டியதாக விசாகப்பட்டினம் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு போலீசார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். 2008 முதல் இந்நிறுவனத்தின் சார்பில் கட்டிடம், சாலை அமைப்பது போன்ற பணிகளுக்கு ஒப்பந்தம் பெறப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018 செப்டம்பர் முதல் கடந்த ஆகஸ்ட் வரை 450 கோடி ரூபாய்க்கு போலியான இன்வாய்ஸ்கள் தயார் செய்து கணக்கு காட்டி அதன் மூலம் சுமார் 67 கோடிக்கு input tax credit பெற முயற்சித்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக ஈரோட்டில் உள்ள அவரது நிறுவனத்தில் இரு தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி. மோசடிகளில் இது மிகப்பெரியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X