Advertisement

மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது

சம்பவம் நவம்பர் 04,2019 | 14:12 IST

Share

நாமக்கல், சேந்தமங்கலம் அருகே நடுக்கோம்பையை சேர்ந்த விவசாயி மோகன், மனைவி கவுசல்யாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அவர்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு தோட்டத்து வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் வழக்கம்போல் மோகன் பணம் கேட்டதால், தம்பதிக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மோகன், மண்வெட்டியின் கைப்பிடி தடியால் கவுசல்யாவின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் மோகன் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X