Advertisement

அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் விழிப்புணர்வு

பொது நவம்பர் 04,2019 | 17:55 IST

Share

நீர்நிலைகளில் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து, விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியை, அமைச்சர் உதயகுமார், துவக்கி வைத்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து அரசு துறைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் ஒத்திகை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், இதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வேளாண் துறை, தோட்டக்கலை துறையுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கிராமங்களில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்படும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X