Advertisement

கேரளாவில் 'பந்த்'; தமிழக பஸ்கள் நிறுத்தம்

பொது நவம்பர் 05,2019 | 13:15 IST

Share

கேரளாவின், பாலக்காடு மாவட்டம் வாளையாரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில், கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டுபேர் வழக்கில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவர்கள் வெளியே வந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி செயல்படுவதால், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாலக்காடு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கேரளாவுக்கு காய்கறி, தென்னை நார் ஏற்றி செல்லும் லாரிகளும், தமிழக -கேரள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X