Advertisement

பெண் சிசுவை ஆற்றில் புதைத்த தந்தை கைது

சம்பவம் நவம்பர் 05,2019 | 14:20 IST

Share

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வரதராஜன்- சவுந்தர்யா தம்பதியினர். 15 நாட்களுக்கு முன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தை வீட்டிற்கு வந்த பிறகு, 3 வது நாள் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில், குழந்தையைத் தென்பெண்ணை ஆற்றில் புதைக்க எடுத்து சென்றுள்ளார் வரதராஜன். அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்டு மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். கணவரின் நடத்தையால் பயந்து போன சவுந்தர்யா தாய் வீட்டில் பிள்ளையை வளர்த்து வந்துள்ளார். சவுந்தர்யாவிடம் நாடகம் ஆடி நாம் ஒன்றாக வாழலாம் என கூறி, திங்களன்று தமது வீட்டிற்கு அழைத்து வந்தார் வரதராஜன்.மாலை வீட்டில் இருந்த குழந்தையை அருகில் இருந்த தென்பெண்ணை ஆற்றிற்கு கொண்டு சென்று புதைத்து உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X