பொது » ரூ.7,000 கோடி வங்கி மோசடி; நாடு முழுவதும் சி.பி.ஐ., ரெய்டு நவம்பர் 05,2019 16:36 IST
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் மோசடி நடைபெற்றதாக சிபிஐ தரப்பில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். எந்த வங்கியில், யார் செய்த மோசடி என்பது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
வாசகர் கருத்து