Advertisement

காளஹஸ்தி கோயிலில் சத சங்காபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ நவம்பர் 06,2019 | 15:30 IST

Share

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குரு பெயர்ச்சி நடந்ததை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சங்கல்பம், சிறப்பு கலச பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகம் வளர்த்து பால் , தயிர், விபூதி, சந்தனம் , மஞ்சள் போன்ற வாசனை திரவியங்களால் அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகம் , நைவேத்தியம், மகா தீபாராதனையை தொடர்ந்து மாலையில் சந்தன காப்பு அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. இரவு 7 மணிக்கு குரு தட்சிணாமூர்த்தி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X