Advertisement

மீண்டும் சிம்பு உடனே 'மாநாடு' நடக்கிறது

சினிமா வீடியோ நவம்பர் 06,2019 | 18:24 IST

Share

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க 'மாநாடு' படம் ஆரம்பமாக இருந்தது. ஆனால், சிம்பு படக்குழுவிற்கு ஒத்துழைக்காததால் படப்பிடிப்பு தள்ளி போனது. ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த தயாரிப்பாளர் படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாக அறிவித்தார். சிம்பு தரப்பில் 'மகா மாநாடு' படத்தை ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளியானது. பின் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு, சுரேஷ் காமாட்சி இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் சிம்பு 'மாநாடு' படத்தில் மீண்டும் நடிப்பார் என்றும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் டுவிட்டரில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு, “விரைவில் எஸ்டிஆரின் மாநாடு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X