Advertisement

சிங்கப்பூரில் புதுச்சேரி முதலமைச்சர்

பொது நவம்பர் 07,2019 | 16:00 IST

Share

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 3 நாள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழிலதிபர்கள் பலரை சந்தித்து, தொழில் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். அப்போது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாடு என பல்வேறு துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள், புதுச்சேரியில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X