விளையாட்டு » வருவாய் பள்ளிகளுக்கான கேரம் போட்டி நவம்பர் 09,2019 17:33 IST
கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட கேரம் போட்டிகளில், வெற்றி பெற்ற, 11 குறுமைய பள்ளி மாணவ, மாணவியருக்கான, வருவாய் மாவட்ட கேரம் போட்டி, பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளியில் நடந்தது. மாணவர் 14 வயது ஒற்றையர் பிரிவில் ஹோலிபேமிலி கான்வென்ட் முதலிடம், 14வயது இரட்டையர் பிரிவில் சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றன. 17 வயது இரட்டையர் பிரிவில், வாசவி வித்யாலயா பள்ளியும் 19 வயது இரட்டையர் பிரிவில் அரசூர் அரசு பள்ளியும் முதலிடம் பெற்றன. 14 வயது மற்றும் 17 வயது மாணவியர் இரட்டையர் பிரிவுகளில் கிருஷ்ணம்மாள் பள்ளி முதலிடம் பெற்றது. முதலிடம் பெற்ற பள்ளி அணிகள் மாநில போட்டிக்கு விளையாட தகுதி பெற்றன.
வாசகர் கருத்து