Advertisement

மாவோயிஸ்ட் தீபக் வனப்பகுதியில் கைது

பொது நவம்பர் 09,2019 | 19:42 IST

Share

கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன், தண்டர் போல்ட் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த மாவோயிஸ்ட் தீபக், துப்பாக்கி குண்டு காயத்துடன் தப்பிச் சென்றார். அவரை தேடும் பணியில் கேரள மற்றும் தமிழக போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை முழக்கன்கல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப் படைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து. தேடுதல் பணியில் தொடர்ந்தது. அங்கு, காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை, போலீசார் கைது செய்து வனப்பகுதியில் இருந்து வெளியே துாக்கி வந்தனர். அவருடன் இருந்த 3 மாவோயிஸ்டுகள் தப்பினர். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக, கோவைக்கு அழைத்துச் சென்றனர். தீபக் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட தகவல் அறிந்த கிராம மக்கள் மருத்துவமனை முன்பாக குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X