பொது » புல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி நவம்பர் 10,2019 16:45 IST
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான புல் புல் புயல், தீவிர புயலாக மாறி மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரைகளுக்கு இடையே கரையைக் கடந்தது. அதன் காரணமாக, மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசியது. ஞாயிறு அதிகாலை புயல் வலுவிழந்து, வங்கதேசம் நோக்கி நகர்ந்து வருவதாக, இந்திய வானிலை ஆராய்ச்சி மையமம் தெரிவித்தது. புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் மழை பெய்துவருகிறது. கோல்கட்டாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
வாசகர் கருத்து