பொது » எச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி நவம்பர் 10,2019 18:10 IST
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு அந்த நாட்டு அரசு, 'எச் 1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது. எச்-1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர் அமெரிக்காவில் பணிபுரிய ஒபாமா ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் பலனடைந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து பல அமெரிக்கர்கள் தரப்பில் கொலம்பியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எச் 4 விசா வைத்திருப்போருக்கு பணி வழங்கப்பட்டதால், தங்களது வேலை பறிபோனது; எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் பணிபுரிய தடை விதிக்க வேண்டுமென சேவ்ஸ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ என்ற அமைப்பின் சார்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த கொலம்பியா கோர்ட், தடை விதிக்க மறுத்துவிட்டது. வழக்கை கிழமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. வழக்கை முதலில் இருந்து முழுமையாக விசாரிப்பதே சரி என, நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதனால், இப்போதைக்கு அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து