பொது » பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து நவம்பர் 10,2019 18:25 IST
ஈரோடு, அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகவுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு பெய்த கனமழையால், செட்டிநொடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. பெரிய கற்களும், மண்ணும் சரிந்து மலைப்பாதையை மூடியதால், தமிழக - கர்நாடக மாநில வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. 8 மணிநேரத்திற்கு மேலாக நடந்த பணியைடுத்து சாலை சீரமைக்கப்பட்டது. இதனிடையே, அதிக பாரம் ஏற்றிவந்த லாரி குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர்.
வாசகர் கருத்து