Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு நவம்பர் 11,2019 | 19:23 IST

Share

பெடரேஷன் கோப்பை: பிரான்ஸ் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனல் நடந்தது. இதில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரான்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன் 1997, 2003ல் கோப்பை வென்றிருந்தது. ----- ஏ.டி.பி., பைனல்ஸ்: பெடரர் தோல்வி லண்டனில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 6-1 என, இத்தாலியின் மேட்டியோ பெர்ரேட்டினியை வீழ்த்தினார். ----- ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ஏமாற்றம் பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சென்னை அணி, இதுவரை விளையாடிய 4 போட்டியில், ஒரு 'டிரா', 3 தோல்வி என கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது. ----- கோப்பை வென்றது இந்தியா நாக்பூரில் நடந்த 3வது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. இப்போட்டியில் இந்தியாவின் தீபக் சகார், 'ஹாட்ரிக்' உட்பட 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் இந்தியரானார். தவிர, ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலரானார். ----- சச்சினை முந்திய ஷபாலி வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் நடந்த முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 84 ரன் வித்தியாசத்தில் விண்டீசை தோற்கடித்தது. அபாரமாக ஆடிய இந்தியாவின் ஷபாலி வர்மா, 73 ரன் குவித்தார். இதன்மூலம் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அரைசதமடித்த இந்தியரானார். இவர், 15 ஆண்டு, 285 நாட்களில் இச்சாதனை படைத்தார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின், 16 ஆண்டு, 214 நாட்களில் தனது முதல் டெஸ்ட் அரைசதமடித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X