பொது » பெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி நவம்பர் 12,2019 20:13 IST
'இன்னர் வீல் டிஸ்ட்ரிக் 320' சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் இரு தினங்கள் நடைபெற்றது. 'இணைந்து செயல்படுவோம்' என்பதை மையமாக கொண்டு நடந்த இந்நிகழ்ச்சியின் முதல் நாளில், நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளாக செவ்வாயன்று 'இன்னர் வீல் டிஸ்ட்ரிக் 320' சார்பில் தலா, 25 ஆயிரம் ரூபாய் முன்தொகை உதவியில் ஆறு பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. ஆட்டோவுக்கான மீதத்தொகையை பெண்கள் தங்கள் உழைப்பில் மாதத்தவணையாக செலுத்தி வாகனத்தை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
வாசகர் கருத்து