விளையாட்டு » அரையிறுதியில் ஐசிஎப் முன்னேற்றம் நவம்பர் 13,2019 15:23 IST
சென்னை ஐசிஎப் விளையாட்டு அரங்கில் அகில இந்திய ரயில்வே துறை அணிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகள் கடந்த 8ம் தேதி தொடங்கியது. போட்டியில் 21 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் காலிறுதி போட்டியில் சென்னை ஐசிஎப் அணியும் செகந்திராபாத் சேர்ந்த தென் மத்திய ரயில்வே அணியும் மோதின. இதில் மூன்றுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் சென்னை ஐசிஎப் அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடந்த போட்டியில், ஹூக்லியை சேர்ந்த தென்மேற்கு ரயில்வே அணியும் மும்பையைச் சேர்ந்த மேற்கு ரயில்வே அணியும் மோதியதில், ஹூக்லி அணி 3 க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வாசகர் கருத்து