Advertisement

பெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்

சம்பவம் நவம்பர் 13,2019 | 15:30 IST

Share

தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் அபிராமி. தஞ்சை மாதாகோட்டை வைரம் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி டென்னி ராபர்ட்ஸ். பாஸ்டராக உள்ளார். இவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளனர் . அதனைத் தொடர்ந்து ஸ்டான்லி டென்னி அடிக்கடி அபிராமியுடன் தகாத உறவு வைத்துள்ளார் . கர்ப்பமடைந்த அபிராமியிடம், திருமணம் முடிந்து குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி கர்ப்பத்தைக் கலைக்கும்படி கூறியுள்ளார் ஸ்டான்லி டென்னி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஸ்டான்லி டென்னிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அபிராமி அதிர்ச்சி அடைந்தார். அபிராமி தனது பெற்றோருடன் ஸ்டான்லி பென்னி வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அபிராமியை மிரட்டி அனுப்பி விட்டனர். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அபிராமி புகார் அளித்தார். இந்நிலையில் ஸ்டான்லி டென்னிக்கு அவரது பெற்றோர் ரகசியமாக வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த அபிராமி, தனது பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். ஸ்டான்லி டென்னி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X