சம்பவம் » ரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலி நவம்பர் 14,2019 11:00 IST
கோவை இருகூர் - சூலூர் இடையேயான ராவுத்தர்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் புதனன்று இரவு 11.30 மணியளவில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவேக ரயில் கல்லூரி மாணவர் மீது மோதியது. இதில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக், ராஜா, கருப்புசாமி, ராஜசேகர், கவுதம் என தெரியவந்தது. கரும்புசாமி, கவுதம் ஆகிய இருவர் அரியர்ஸ் தேர்வு எழுத வந்த பொறியியல் மாணவர்கள். மற்ற மூவரும் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளனர் என தெரியவந்தது.
வாசகர் கருத்து