பொது » இருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது நவம்பர் 15,2019 17:00 IST
கரூர், காந்திகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், தன்னிடம் இரிடியம் இருப்பதாக விவசாயி ராமலிங்கத்திடம் கூறியுள்ளார். இரிடியத்தை வீட்டில் வைத்தால், ஐஸ்வரியங்கள் கூடும் பணம் கொட்டும் எனவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை தருவதாகவும் சதீஷ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய ராமலிங்கம், ஈரோடு அந்தியூர் பேருந்துநிலையத்தில், 10 லட்சம் ரூபாயை சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சதீஷ், இரிடியத்தை தராமல் ஏற்றியுள்ளார். அந்தியூர் போலீசில் ராமலிங்கம் புகார் அளித்தார். இந்த மோசடியில் சதிஷ்குமாருக்கு துணையாக இருந்த அவரது நண்பர்கள் செந்தில்ராஜ், சேட்டு, காசிநாதன் துரை, மதன், சுரேஷ்,பிரசாந்த் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர். 10 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து