அரசியல் » சிதம்பரத்துக்கு ஜாமின்; ஐகோர்ட் மறுப்பு நவம்பர் 15,2019 15:00 IST
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 21ல் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அக்டோபர் 22-ம்தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. அதற்கு முன், அக்டோபர் 16ம்தேதியே சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. 2வது வழக்கில், டில்லி ஐகோர்ட்டிடம் சிதம்பரம் ஜாமின் கேட்டார். சிதம்பரம் 7 கிலோ குறைந்துவிட்டார்; உடல்நிலை மோசமாவதால் ஜாமின் தர வேண்டும்'' என்று வாதிட்டார், அவர் வக்கீல் கபில் சிபல். ''பொருளாதார குற்றம் மிகக்கொடூரமானது; ஜாமின் தரக்கூடாது'' என அரசு வக்கீல் துஷார் மேத்தா கூறினார்.
வாசகர் கருத்து