பொது » ஊடகங்களை விளாசிய வெங்கையா நவம்பர் 16,2019 14:11 IST
இந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்தி புதிய விளக்கத்தையோ தவறான ஒரு விளக்கத்தையோ சொல்வதாகவோ இல்லை என்றார். ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்னையே. "சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளதாக கூறினார் வெங்கையா.
வாசகர் கருத்து