ஆன்மிகம் வீடியோ » காஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை நவம்பர் 17,2019 16:32 IST
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மண்டை விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை முதல் ஞாயிறன்று மண்டை விளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் மண்சட்டியில் மாவிளக்கு எடுத்து, தலையில் சுமந்தபடி கோயிலை வலம் வந்து சிவபெருமானை வழிபட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். இப்படி செய்வதன் மூலம், தலை வலி, கைகால் வலி, கண்வலி, தொண்டை வலி போன்ற பல வித உடல்உபாதைகள் தீரும் என்பது ஐதீகம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து