விளையாட்டு » மாநில கபடி போட்டி: அணி தேர்வு நவம்பர் 17,2019 00:00 IST
தமிழ்நாடு அம்மெசூர் கபடி மற்றும் கிருஷ்ணகிரி அம்மெசூர் கபடி கழகம் இணைந்து நடந்தும், ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கான மாநில கபடி போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது. இதற்கான மாவட்ட அணி தேர்வு, கோவை அம்மெசூர் கபடி கழகம் சார்பில், அத்திப்பாளையம் ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில், சனியன்று நடந்தது. 'நாக்- அவுட்' முறையில் நடத்தப்பட்ட போட்டியில், ஆண்கள் பிரிவில், 65 அணிகளும், பெண்கள் பிரிவில், 5 அணிகளும் பங்கேற்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் மாநில போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெறும்
வாசகர் கருத்து