பொது » 480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய் நவம்பர் 18,2019 17:00 IST
கர்நாடகாவ சேந்த ராஜேஷ் அய்யப்ப பக்தர். அவரும் 12 நண்பர்களும் மாலை போட்டு திருப்பதி போய் அங்க இருந்து சபரிமலைக்கு நடைபயணம் தொடங்குனாங்க. தெருவுல போய்கிட்டு இருந்த ஒரு நாய்க்கு என்ன தோணுச்சோ, தெரில இவங்க பின்னாடி அதுவும் நடக்க ஆரமிச்சுது. சரி, கொஞ்ச தூரம் வந்துட்டு திரும்பிடும்னு அவங்க நெனச்சாங்க. ஆனா கால்ல அடிபட்டு இருந்தாலும் விடாம கூடவே நடந்து வந்துது. இவங்க அங்கங்க ரெடி பண்ற டிஃபன்லாம் குடுத்தப்ப முதல்ல நாய் தயங்குச்சாம். அப்றம் சகஜமாயிருச்சாம். இதுவரைக்கும் 480 கிலோமீட்டர் அவங்க கூடவே நடந்திருக்கு அந்த பெண் நாய். கழுத்துல லெதர் காலர் இருக்கு. வீட்டு நாயாதான் இருக்கணும்; பாவம், தேடுறாங்களோ என்னவோன்னு பக்தர்களுக்கு கவலை.
வாசகர் கருத்து