பொது » மளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல் நவம்பர் 18,2019 17:31 IST
ஈரோடு, பெருந்துறையில் பழைய பஸ் நிலையம் அருகே உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அண்ணராஜ் என்பவரின் மளிகை கடைக்கு பொருட்கள் சப்ளை செய்யவந்த காரை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில், 35 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர் அண்ணராஜ் வீட்டில் சோதனையிட்டனர். அங்கும் பண்டல் ,பண்டலாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சிக்கன. அவற்றின் மதிப்பு 5 லட்சம் என கூறப்படுகிறது.
வாசகர் கருத்து