Advertisement

மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்

விளையாட்டு நவம்பர் 18,2019 | 19:13 IST

Share

ஜூனியர்களுக்கான கபடி போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ளது. இதற்கான மாவட்ட அணி தேர்வுக்காக, கோவை அம்மெசூர் கபடி கழகம் சார்பில், மாவட்ட கபடி போட்டி அத்திப்பாளையம் ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இறுதிப்போட்டியில், கற்பகம் 'ஏ' அணி, 32-24 என்ற புள்ளி கணக்கில், கற்பகம் 'பி' அணியை வென்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில், கோயம்புத்துார் கபடி கிளப் அணி, 25-17 என்ற புள்ளி கணக்கில், ரத்தினம் கல்லுாரி அணியை வென்றது. இதில், சிறப்பாக விளையாடிய 25பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இறுதிக்கட்ட தேர்வு புதனன்று நடைபெறவுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X