பொது » போகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம் நவம்பர் 19,2019 17:16 IST
கோவை, வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த செந்தில்குமார், பதவி உயர்வில், கோவை, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆனால், மாணவ, மாணவிகளோ தங்கள் ஆசிரியரை பிரிய மனமில்லாமல் செந்தில்குமாரை சூழ்ந்து கொண்டு, 'போகாதீங்க சார், இங்கேயே இருக்க சார்' என்று பாசத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற ஆசிரியர் செந்திலும் ஒரு கட்டத்தில் கண்கலங்கிவிட்டார். நீண்டநேரம் நடந்த இந்த உணர்வு பூர்வமாக பாசப்போராட்டம் ஆசிரியர்கள், பெற்றோரை நெகிழ வைத்தது.
வாசகர் கருத்து