பொது » மாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்' நவம்பர் 19,2019 19:24 IST
ஈரோடு, அம்மாபேட்டை அடுத்த அலங்காரியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியர் செல்வராஜ், பாடம் தொடர்பாக மாணவ, மாணவிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பதில் கூறாதவர்கள் மீது கோபமடைந்த ஆசிரியர், பிரம்பால் கண்மூடித்தனமாக அடித்தாக கூறப்படுகிறது. இதில், சிலர் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆசிரியர் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து