Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு நவம்பர் 20,2019 | 19:13 IST

Share

கொரிய பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி தென் கொரியாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் விங் கி வின்சென்ட் வோங் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா வெற்றி பெற்றார். இந்தியாவின் சவுரப் வர்மா தோல்வியடைந்தார். ----- துப்பாக்கி சுடுதல்: மனு பாகர் ஏமாற்றம் சீனாவில், துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை பைனல்ஸ் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 25 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பாகர், 583.17 புள்ளிகளுடன் 10வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ராஹி சர்னோபட் 569.25 புள்ளிகளுடன் 18வது இடத்தை கைப்பற்றினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் பைனலுக்கான வாய்ப்பை இழந்தனர். ----- 'யூரோ' கால்பந்து: ஜெர்மனி தகுதி ஜெர்மனியில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து தொடருக்கான 'சி' பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் ஜெர்மனி, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஜெர்மனி அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 8 போட்டியில், 7 வெற்றி, ஒரு தோல்வி என, 21 புள்ளிகளுடன் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்து 'யூரோ' கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. ----- டேவிஸ் கோப்பை: ஸ்பெயின் வெற்றி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடக்கும் டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் தொடருக்கான லீக் போட்டியில் ஸ்பெயின், ரஷ்யா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-1 என வெற்றி பெற்றது. ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்பெயினின் நடால் வெற்றி பெற்றார். மற்றொரு ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு போட்டியில் ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸ், பெலிசியானோ லோபஸ் ஜோடி வெற்றி பெற்றது. -----


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X