Advertisement

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

விளையாட்டு நவம்பர் 21,2019 | 17:17 IST

Share

'தினமலர்' நாளிதழ் மற்றும் 'பூஸ்ட்' நிறுவனம் சார்பில், இளம் வீரர்களை கிரிக்கெட் போட்டியில் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் வீரர்கள் தேர்வு நடத்தப்படுகிறது. கோவையில் நடந்த போட்டியில், 11, 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், நூற்றுக்கணக்னோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வீரர்களின் 'பேட்டிங்', 'பவுலிங்', 'கீப்பங்', உடல்திறன், விளையாட்டு நுணுக்கம் போன்ற பல்வேறு அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடந்தது. இறுதியாக சிறந்த நான்கு வீரர்களை தேர்வு செய்தனர். தேர்வான வீரர்கள் ஆறு மாதத்திற்கு 'ஹைலைட் கிரிக்கெட் அகாடமி'யில் அமைந்துள்ள கிரிக்கெட் வளைப்பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை 'பூஸ்ட்' நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X